கோலாலம்பூர், ஏப்ரல் 19 – பொதுத்தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் பாஸ் சின்னத்தையும், சபா, சரவாக் மாநிலங்களில் பிகேஆர் சின்னத்தையும் ஜ.செ.க பயன்படுத்தப் போவதாக அதன் தலைவர் கர்பால் சிங் அறிவித்துள்ளார்.
உட்கட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகள் மீதான விசாரணையில், சங்கப் பதிவாளர் அலுவலகம் நேற்று ஜ.செ.க கட்சியின் பதிவை ரத்து செய்வதாகக் கூறி கடிதம் அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து, ஜ.செ.க சார்பாக பதிவு ரத்தை திரும்பப் பெறக் கோரி சங்கப் பதிவதிகாரியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலையில், தற்போது வரை சங்கப் பதிவதிகாரியிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், ஜ.செ.க தனது ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
இது குறித்து பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முஸ்தபா அலியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெனிசுலாரில் ஜ.செ.க பாஸ் சின்னத்தைப் பயன்படுத்தும் என்று உறுதியளித்தார்.
மேலும் விரிவான செய்திகள் விரைவில்…