Home One Line P1 பெர்சாத்துவுடனான உறவு முடிந்தது- அம்னோவை குழப்ப வேண்டாம்!

பெர்சாத்துவுடனான உறவு முடிந்தது- அம்னோவை குழப்ப வேண்டாம்!

475
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொகிதின் யாசின் கட்சியுடனான உறவுகளைத் துண்டிக்க கட்சி முடிவெடுத்த போதிலும், பல அம்னோ உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவை ஆதரிக்கின்றனர் என்று  தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இவர்கள் கட்சியை பலவீனப்படுத்துவதாக தாஜுடின்  கண்டித்தார்.

“அம்னோ எப்படி பலப்படும்? கட்சியை பலவீனப்படுத்துவது யார்? பெர்சாத்து அல்ல. நாம் தான். நாம் ஒன்றாக ஒன்றுபடவில்லை,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

அம்னோ தேர்தல் இயக்குநரான தாஜுடின், 15-வது பொதுத் தேர்தல் நெருங்கும் போது கட்சிக்குள் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படாது என்று நம்புவதாகக் கூறினார்.

“நாங்கள் (அம்னோ) பிப்ரவரி 26 அன்று மொகிதினுக்கு தேசிய முன்னணி , பெர்சாத்து உடன் வேலை செய்யாது என்று அறிவித்திருந்தோம், ” என்றார்.

கட்சிப் பெயரில் அவர்கள் 14-வது பொதுத் தேர்தலில் வென்றதை அவர் நினைவுபடுத்தினார்.