Home One Line P1 சாஹிட் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப்பட்டன

சாஹிட் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப்பட்டன

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி எதிர்கொள்ளும் பணமோசடி குற்றச்சாட்டின் 27- வது குற்றச்சாட்டை அரசு தரப்பு மாற்றியது.

30 காசோலைகளிருந்து (6,885,300.20 ரிங்கிட் ) 35 காசோலைகளாக (7,511,250.20 ரிங்கிட்) மாற்றப்பட்டது.

சமீபத்திய குற்றச்சாட்டில், அகமட் சாஹிட் ஹமிடி, 2016-இல் மார்ச் மற்றும் ஜூலைக்கு இடையில் – ஒமர் அலி அப்துல்லாவை தனது சார்பாக 7,511,250.20 ரிங்கிட் ரொக்கத்தை 35 காசோலைகளாக மாற்ற உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

இப்புதிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது சாஹிட் ஹமிடி தாம் குற்றவாளி அல்ல என்று மறுத்தார்.

“எனக்கு தண்டனையை அதிகரிக்க இந்த குற்றச்சாட்டு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நன்றி. (நான்) ஒப்புக்கொள்ளவில்லை, ” என்று அவர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை முதல், நீதிமன்றத்தில் 81- வது சாட்சியாக இருக்கும் ஒமர் அலி, லூயிஸ் அண்ட் கோ நிறுவனத்திற்கு 35 காசோலைகள் பரிவர்த்தனை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். அவை தெரியாதவரிடமிருந்து பெறப்பட்ட பணத்திலிருந்து பரிமாறிக்கொள்ளப்பட்டன.