Home One Line P2 டிரம்ப் போல பைடனும் அடம்பிடிக்கிறார், அமெரிக்காவை எச்சரித்த சீனா

டிரம்ப் போல பைடனும் அடம்பிடிக்கிறார், அமெரிக்காவை எச்சரித்த சீனா

741
0
SHARE
Ad

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் பாணியையே தற்போதய அதிபர் கையில் எடுக்கக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில், மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி, அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் சீனாவை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கக் கூடாது என்று அது கூறியுள்ளது.

சீனாவுக்கு எதிரான வணிகப் போரை கையில் எடுத்த டொனால்டு டிரம்ப், கொவிட்-19 தொற்று காலகட்டத்தில் சீனாவை வெளிப்படையாக பகிரங்கமாக தாக்கினார்.

#TamilSchoolmychoice

சீனாவில் கடந்த 1949- ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு, தைவான் உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. தேவைப்பட்டால், தைவானை கைப்பற்றவும் தயங்காது என்றும் சீனா கூறுகிறது.

முந்தைய டொனால்டு டிரம்ப் நிர்வாகம், தைவானுக்கு ஆதரவாக இருந்து வந்தது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்தது. தற்போது, ஜோ பைடன் பதவியேற்றுள்ள நிலையில், தைவான் விவகாரத்தில் முந்தைய டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையையே ஜோ பைடன் கடைப்பிடித்து வருகிறார்.

இதனை கண்டித்து, சீனா டிரம்ப்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென ஜோ பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.