கோலாலம்பூர்: மலேசியாவில் பெறப்பட்ட மொத்தம் 585 பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் திருப்பி அனுப்பப்பட்டன. தடுப்பூசிகளின் சேமிப்பின் போது வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவை சேதமடைந்துள்ளன.
தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், இருப்பினும், முன்னர் பெறப்பட்ட 500,000- க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, இது சிறிய எண்ணிக்கையிலானது என்று கூறினார்.
“பெல்ஜியத்தில் உள்ள தொழிற்சாலையிலிருந்து மலேசியா வரும் வழியில், சேமிப்பின் போது வெப்பநிலை சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத வெப்பநிலை அதிகரிப்பால், 585 தடுப்பூசிகளை பிபைசர் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பினோம்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சேதமடைந்த தடுப்பூசியின் அளவை நிறுவனம் மீண்டும் திருப்பி அனுப்பும் என்று கூறினார்.