Home One Line P2 தமிழ் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பு- தேர்தலில் பாதிப்பு உண்டா?

தமிழ் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பு- தேர்தலில் பாதிப்பு உண்டா?

601
0
SHARE
Ad

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தமாக அம்மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 8,60,562- ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 800- க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டதால் தமிழகத்தில் இரண்டாவது அலை உருவாகியிருக்கிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் திரளும் பொதுமக்கள் போதிய கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது.