Home One Line P2 ‘அசுரன்’: ஒசாகா தமிழ் அனைத்துலக திரைப்பட விழாவிற்கு தேர்வு

‘அசுரன்’: ஒசாகா தமிழ் அனைத்துலக திரைப்பட விழாவிற்கு தேர்வு

605
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ திரைப்படம் ஒசாகா தமிழ் அனைத்துலக திரைப்பட விழாவில் (ஜப்பான்) திரையிட தேர்வாகியிருக்கிறது.

இத்திரைப்பட விழா வருகிற மார்ச் மாதம் 27 மற்றும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், சிறந்த தமிழ் படத்திற்கான போட்டியிலும் இப்படம் தேர்வாகி உள்ளது.

2019 ஆண்டு வெளியான இத்திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. தனுஷ் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் சிறப்பாக நடித்திருந்தனர். இத்திரைப்படம் எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.