Home One Line P1 அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை

அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவுடன் ஒத்துழைப்பு விவகாரம் ஊகங்கள் அடிப்படையில் பேசப்படுவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அம்னோவுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்று மட்டுமே, தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறவில்லை என்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அன்வார் தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, 15- வது பொதுத் தேர்தலுக்காக தனது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

#TamilSchoolmychoice

இரு கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மலேசியாகினியிடம் கட்சி வட்டாரம் உறுதிப்படுத்தியிருந்தது.

பிரதமர் மொகிதின் யாசினின் பெர்சாத்து கட்சி மீது இரு கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளன என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. அண்மையில் உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில், அன்வார் பிகேஆர்-அம்னோ ஒத்துழைப்பு நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இரு கட்சிகளுக்கிடையில் தொடர்ச்சியான அதிகாரப்பூர்வமற்ற கூட்டங்கள் நல்லமுறையில் நடந்ததாகவும், இரு கட்சிகளும் பரஸ்பர புரிந்துணர்வை அடைய முடிந்தால், அது நல்ல பாதையை அமைக்கும்  என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பின் நோக்கம் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதே ஆகும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.