Home One Line P1 தேசிய கூட்டணிக்கு இன்னமும் பெரும்பான்மை இல்லை!- அன்வார்

தேசிய கூட்டணிக்கு இன்னமும் பெரும்பான்மை இல்லை!- அன்வார்

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தாலும், அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு 110 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

இன்னும் ஐந்து அல்லது ஆறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்க முடிந்தாலும், அவர்களுக்கு பெரும்பான்மையினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஐந்து முதல் ஆறு பேரை தேசிய கூட்டணிக்கு ஈர்ப்பதன் மூலம், அரசு இன்னும் 110 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெறவில்லை. இது ஒரு தெளிவான கணக்கு என நான் உறுதியாக நம்புகிறேன், ” என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மார்ச் 13 அன்று, கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பிகேஆரிலிருந்து வெளியேறி தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

அன்வார் தனக்கு இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வலுவான ஆதரவு இருப்பதாக வலியுறுத்தினார்.

“எளிய கணிதம் – 111 அல்லது 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தேசிய கூட்டணி கூறுகிறது. ஆதரவை வெளிப்படுத்தியவர்களில் சிலரை நாங்கள் எடுத்துக் கொண்டால், கணக்கு அடிப்படியில் அவர்கள் 100 பேர் மட்டுமே தங்குவர். இதில் வாரிசான், பெஜுவாங் , முடா என 13 பேர் அடங்கவில்லை,” என்று அவர் கூறினார்.