Home One Line P1 சுங்கை பட்டாணி: கோயில் இடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

சுங்கை பட்டாணி: கோயில் இடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

830
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடா, ஜாலான் அவாமில் உள்ள ஒரு சிறிய கோயில், அகற்றப்படவில்லை என்றால் இடிக்கபப்டும் என்று அண்மையில் சுங்கை பட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி) தெரிவித்திருந்தது. அவர்கள் வெளியேற மூன்று நாட்கள் அது அவகாசம் வழங்கியது.

ஆயினும், தற்போது, கோயில் இடிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்த எம்.பி.எஸ்.பி ஒப்புக்கொண்ட பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த ஒத்திவைப்பை கெடா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி குமரேசன் உறுதிப்படுத்தினார்.

“கோவிலில் இருந்து எனக்கு புகார் வந்தவுடன், நான் அங்கு விரைந்தேன். நானும் இரண்டு கோயில் பிரதிநிதிகளும் இன்று பிற்பகல் (மார்ச் 16) எம்.பி.எஸ்.பி அமலாக்க அதிகாரியுடன் கலந்துரையாடினோம். பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கோயில் இடிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மார்ச் 22- ஆம் தேதி எம்.பி.எஸ்.பி, கோயில், நில உரிமையாளர்கள், இந்திய சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கூட்டம் நடைபெறும் என்றும் குமரேசன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த கோயில் இடிப்பு விவகாரம் தொடர்பாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கெடா பாஸ் அரசை சாடியிருந்தார்.