கோலாலம்பூர்: அரசியலில் கட்சித் தாவுவதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இதனால் கட்சியின் போராட்டம் குறித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியும் என்று அவர் கூறினார்.
அவர்கள் அதன ஏற்க முடியாவிட்டால் அவர்கள் இறுதியில் வெளியேறலாம், ஆனால் பாஸ் எப்போதும் நிலைத்திருக்கும் இருக்கும் என்று அவர் கூறினார்.
“இஸ்லாமிய நம்பிக்கைக்கு ஏற்ப வலுவான விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தங்கள் போராட்டத்தில் துணையாக இருப்பார்கள். பாஸ் தொடர்ந்து புதியவர்களை ஏற்றுக்கொண்டு, அதன் உறுப்பினர்களை கல்விச் செயல்பாட்டின் மூலம் அதிகரிக்கும். கட்சித் தாவுபவர்கள் உட்பட இணைய அல்லது வெளியேற விரும்புவோருக்கு பாஸ் என்றுமே தனது கதவுகளை திறந்திருக்கும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்றுவரை, 15 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 10 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவுக்கு கட்சித் தாவி உள்ளனர்.