அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான அக்வொர்த்தில் உள்ள ஒரு ஸ்பாவில் நான்கு பேரும், மேலும் நான்கு பேர் நகரத்திலேயே இரண்டு ஸ்பாக்களில் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பலியானவர்களில் 4 பேர் கொரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை தென் கொரியா பின்னர் உறுதிப்படுத்தியது.
21 வயது ஆடவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், அவரை காவல் துறை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரையிலும், துப்பாக்கிச் சூட்டுக்கான எந்த நோக்கமும் இதுவரை நிறுவப்படவில்லை.
இருப்பினும், ஆசிய-அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளன.
Comments