Home One Line P1 எட்மண்ட் சந்தாரா: பிரபாகரன் நியூசிலாந்து தூதரகத்தில் மனு

எட்மண்ட் சந்தாரா: பிரபாகரன் நியூசிலாந்து தூதரகத்தில் மனு

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா, நியூசிலாந்து நாட்டின் சட்டங்களை மீறியிருந்தால், உடனடியாக மலேசியாவுக்கு திருப்பி அனுப்புமாறு நியூசிலாந்து தூதரகத்தில் கூட்டரசு பிரதேச பிகேஆர் இளைஞர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, அதன் தலைவர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர், பி.பிரபாகரன், நியூசிலாந்தில் தனது குடும்பத்தினருடன் இருக்க ஊதியம் இல்லாத விடுப்பு உட்பட 55 நாட்கள் விடுப்பு எடுத்துள்ள துணை அமைச்சரின் பயண நிலையை அறிய மனு ஒன்றை தூதரகத்திடம் வழங்கினார்.

நியூசிலாந்தில் கொவிட் -19 தொடர்பான குடிவரவு சட்டங்கள் அல்லது விதிமுறைகளை அவர் மீறியுள்ளதாக கண்டறியப்பட்டால், எட்மண்ட் சந்தாராவை விசாரித்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

#TamilSchoolmychoice

“நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகம், மலேசியாவிலிருந்து துணை அமைச்சருக்கு நியூசிலாந்து செல்ல வழங்கப்பட்ட நெறிமுறை, ஏற்பாடுகள் மற்றும் ஒப்பந்தம் ஆகியவற்றை விளக்க வேண்டும்,” என்று கோலாலம்பூரில் இன்று காலை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24- ஆம் தேதி நியூசிலாந்திற்கான சந்தராவின் பயணத்தின் மேலாண்மை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து நியூசிலாந்து அரசிடம் விளக்கமும் பிரபகரன் கோரியுள்ளார்.

“நாங்கள் மலேசியர்கள், குறிப்பாக செகாமாட் பகுதியில் வசிப்பவர்கள் சார்பாக இந்த மனுவை ஒப்படைத்தோம். கொவிட் -19 பாதிப்பு காரணமாக பொருளாதார தாக்கம் மலேசியாவில் பல குடும்பங்கள் வேலை மற்றும் வருமான ஆதாரங்களை இழக்க நேரிட்டது. அது மட்டுமல்லாமல், பெரும்பாலான மலேசியர்கள் தற்போது தங்கள் குழந்தைகள் மற்றும் நியூசிலாந்தில் உள்ளவர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க வெளிநாடு செல்ல முடியவில்லை.

“எனவே, எட்மண்ட் சாந்தாரா மலேசியாவை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், நியூசிலாந்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் 55 நாட்கள் எவ்வாறு இருக்க முடிந்தது என்பது குறித்து மேலதிக விளக்கத்தை நாங்கள் கேட்கிறோம்,” என்று அவர் கூறினார்.