Home One Line P2 இந்தியாவில் கொவிட்-19 தொற்று ஒரே வாரத்தில் 260,000-ஐ எட்டியது

இந்தியாவில் கொவிட்-19 தொற்று ஒரே வாரத்தில் 260,000-ஐ எட்டியது

496
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த வாரம் இந்தியாவில் 260,000 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக மோசமான வாராந்திர அதிகரிப்புகளில் ஒன்றாகும்.

மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் 70 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காதது இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்களும் 160,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

செப்டம்பர் மாதத்தில் 90,000- க்கும் அதிகமான தினசரி நோய்த்தொற்றுகள், 20,000 க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்த நிலையில், 2021- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் தொற்று நோய் பாதிப்பு குறையத் தொடங்கியது.

ஆனால், கடந்த சில வாரங்களில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பல மாநிலங்களிலும் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.