Home One Line P1 தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்

491
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு கடுமையான பக்க விளைவுகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

கொவிட் -19 தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைச் சமாளிக்க அரசாங்கத்தின் ஒரு முற்போக்கான முயற்சி இந்த உதவி என்று அவர் கூறினார்.

“தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கொவிட் -19 தடுப்பூசி பெற்ற பின்னர் கடுமையான பக்க விளைவுகளைப் பெறும் மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புத்ராஜெயாவில் நடைபெற்ற இயங்கலை செய்தியாளர் சந்திப்பு மூலம் அடாம் இதனைத் தெரிவித்தார். சிறப்பு நிதி உதவிக்காக அரசாங்கம் இப்போது 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று அடாம் தெரிவித்தார்.

நீண்டகால மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் கடுமையான பக்க விளைவுகளைக் கொண்ட நபர்கள் 50,000 ரிங்கிட் வரை உதவி பெற தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார்.

தடுப்பூசி பெற்றதன் விளைவாக நிரந்தர பாதிப்பு அல்லது மரணம் ஏற்பட்டால் 500,000 ரிங்கிட் உதவி வழங்கப்படும்.