Home One Line P2 இந்தியாவின் தேசிய விருதுகள் : அசுரன் படத்திற்காக தனுஷூக்கு சிறந்த நடிகர் விருது

இந்தியாவின் தேசிய விருதுகள் : அசுரன் படத்திற்காக தனுஷூக்கு சிறந்த நடிகர் விருது

640
0
SHARE
Ad

புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிய தனுஷ் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். ஏற்கனவே, ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றவர் தனுஷ்.

#TamilSchoolmychoice

ஆடுகளம், அசுரன் இரண்டு படங்களையும் இயக்குநர் வெற்றிமாறனே இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான விருது இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயிக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்த முறை இரண்டு நடிகர்களுக்கு வழங்கப்படுகிறது.