Home உலகம் முஷாரப்பை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

முஷாரப்பை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

458
0
SHARE
Ad

musarafபாகிஸ்தான், ஏப்ரல் 18- பாகிஸ்தான்  முன்னாள் அதிபர்  முஷாரப்பை கைது செய்ய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவரது தனியார் பாதுகாப்பு வீரர்களின் உதவியோடு, அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து வெளியே சென்றுவிட்டார். இதனால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது