Home One Line P1 எட்மண்ட் சந்தாரா நாடு திரும்பினார்

எட்மண்ட் சந்தாரா நாடு திரும்பினார்

730
0
SHARE
Ad
எட்மண்ட் சந்தாரா

கோலாலம்பூர்: கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் நியூசிலாந்திலிருந்து திரும்பி விட்டதாகத் தெரிவித்துள்லார். தற்போது, அவர் வீட்டிலேயே கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதாக மலேசியாகினி தெரிவித்தது.

“நான் கடந்த வாரம் மலேசியா திரும்பினேன். சுகாதார அமைச்சகம் நிர்ணயித்த கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

மலேசியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய நாடு தடை விதித்திருந்த போதிலும், நியூசிலாந்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்ட பின்னர் சந்தாரா எதிர்க்கட்சிகள் அரசியல்வாதிகள் மற்றும் மக்களால் விமர்சிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவர் தனது குடும்பத்தினரைப் பார்க்க 55 நாட்கள் விடுப்புக்கு விண்ணப்பித்ததாகவும், டிசம்பர் 3 முதல் பிரதமரின் ஒப்புதல் பெற்ற பின்னர் டிசம்பர் 23 முதல் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

“தற்போது, ​​ஜூம் சந்திப்பு, வாட்சாப் செயலி, காணொலி அழைப்பு மற்றும் பிற தளங்கள் மூலம் இயங்கலையில் பணிகளை மேற்கொள்கிறேன். எனவே, அனைத்து முகநூல் சந்திப்புகள் அல்லது னேரடி சந்திப்புகள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னரே நடைபெறும்,” என்று அவர் மேலும் கூறினார்.