Home One Line P1 எல்லா தொகுதிகளிலும் அம்னோ போட்டியிட்டால், பெர்சாத்துவும் போட்டியிடும்!

எல்லா தொகுதிகளிலும் அம்னோ போட்டியிட்டால், பெர்சாத்துவும் போட்டியிடும்!

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கான இடங்களைப் பற்றி பேசுவதில் அம்னோ பேச்சுவார்த்தைக்கு இடமளிக்காமல் இருப்பதாக பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

அனைத்து 222 நாடாளுமன்ற இடங்களிலும் அம்னோ போட்டியிட முடிவு செய்தால் பெர்சாத்துவும் அவ்வாறு செய்யும் என்று பிரதமர் கூறினார்.

“அது (அம்னோ) இதனை விரும்பினால், நாங்களும் அதையே செய்வோம். அதனால்தான் நான் ஒருபோதும் பெருமிதம் கொள்ளவோ, ஆணவமாகவோ இருக்கவில்லை. அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தில் கூறப்பட்ட அறிக்கைகள் எனக்குப் புரிகின்றன. இதற்கு முன்பு நானும் (அம்னோ துணைத் தலைவராக) இருந்தேன்.

#TamilSchoolmychoice

“மோதலை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை,” என்று இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.