Home One Line P1 4 பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்குழு கூட்டத்தை புறக்கணித்தனர்!

4 பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்குழு கூட்டத்தை புறக்கணித்தனர்!

554
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தை, நான்கு பினாங்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். தங்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

அபிப் பகார்டின் (செபெராங் ஜெயா), சுல்கிப்லி இப்ராகிம் (சுங்கை ஆச்சே), காலிட் மெஹ்தாப் முகமட் இஷாக் (பெர்தாம்) மற்றும் சோல்கிப்லி முகமட் லாசிம் (தெலுக் பஹாங்) ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், நிதி ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டதால் மாநில ஆட்சிக்குழு அமர்வை புறக்கணித்ததாகத் தெரிவித்தனர்.

“இந்த ஒதுக்கீடு 60,000 ரிங்கிட் ஆகும். ஜனவரி 20 அன்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிப்ரவரி 19 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பிரதிநிதிக்கும் பொது வசதிகளுக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கீடு மிகவும் முக்கியமானது.

#TamilSchoolmychoice

“இருப்பினும், மாநில அரசு, இன்று மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராக இந்த நிராகரிப்பை செய்துள்ளது,” என்று அவர்கள் கூறினர்.

பெரும்பான்மையான மக்கள் இன்னும் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்களை தண்டிக்கப்படுவதை நிறுத்தி அரசியல் விளையாட வேண்டாம் என்று நான்கு பேரும் பினாங்கு மாநில அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, அனைத்து எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்களின் நிதி மறுக்கப்பட்டது என்பது உண்மை இல்லை என்று கூறினார். அதற்கு பதிலாக, அந்தந்த தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு மே 27 அன்று பினாங்கு முதல்வர் அறிவித்த “அடுன் அங்கட்” திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டதாகக் கூறினார்.