கோலாலம்பூர்: டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில், நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) குறைந்தது 11 ‘உண்டி18’ அமைப்பாளர்கள், அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் வாக்குமூலத்தை காவல் துறை பதிவு செய்வார்கள்.
‘உண்டி18’ ஆர்ப்பாட்டம் கோலாலம்பூரில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மார்ச் 27 அன்று நடைபெற்றது.
11 நபர்களில் முடா செயலாளர் அமீர் அப்துல் ஹாடி, சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், வழக்கறிஞரும் ஆர்வலருமான அம்பிகா ஸ்ரீனிவாசன் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் தியேன் சுவா ஆகியோரும் அடங்குவர்.
இதற்கிடையில், மேலும் பேரணி பங்கேற்பாளர்களையும் காவல் துறையினர் விசாரிப்பார்கள் என்று டாங் வாங்கி காவல் துறைத் தலைவர் முகமட் சைனால் அப்துல்லா மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
“ஆம், அவர்கள் நாளை வருவார்கள், ” என்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.