Home One Line P1 கட்சி முடிவு என்பதால், வெளியேறுவதற்கு பிரச்சனை இல்லை!- தாஜுடின், இஸ்மாயில் சப்ரி

கட்சி முடிவு என்பதால், வெளியேறுவதற்கு பிரச்சனை இல்லை!- தாஜுடின், இஸ்மாயில் சப்ரி

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்க நிறுவனத்திலிருந்து விலகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கிய நிலைப்பாட்டை விட மிகப் பெரியது என்பதால் பதவியைத் துறக்கத் தயங்கவில்லை என்று பிரசாரானா தலவருமான அவர் கூறினார்.

“கட்டாயம் ! எந்த பிரச்சனையும் இல்லை. அம்னோவின் போராட்டம், கட்சியின் போராட்டம் பெரியது. போராட்டத்தை வர்த்தகம் செய்ய முடியாது, ” என்று அவர் நேற்று அம்னோ பொதுக் கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அம்னோ பேராளர்கள், தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் கட்சியின் உச்சமன்றக் குழு உறுப்பினருக்கு, தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான சரியான தேதியை என்பதை தீர்மானிக்க ஆணையிட்டனர்.

இது முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கையால் தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையும். மொகிதினுக்கு கிட்டத்தட்ட வேறு வழியில்லை, அவர் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு வழிவிட வேண்டி வரும்.

எந்தவொரு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினரும் பிடிவாதமாகவும், கட்சிக்குத் தேவையானபடி பதவி விலகாமல் இருந்தால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள் என்றும் கூறினார்.

“கட்சி ஒரு முடிவை எடுத்திருந்தால், உறுப்பினராக (நாடாளுமன்றம்) எந்தவொரு நிலைப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், கட்சியுடன் இல்லை என்று அர்த்தம். அவர்கள் அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சியை எதிர்ப்பவர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும், ” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தற்காப்பு அமைச்சராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாகோப், கட்சியின் ஒவ்வொரு முடிவிற்கும் தாம் கட்டுப்படுவதாகக் கூறினார்.

“கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் என்ற வகையில், உச்சமன்றக் குழு மற்றும் பொதுக் கூட்டத்தின் முடிவை ஏற்க வேண்டும். நிச்சயமாக நாங்கள் முடிவைக் கடைப்பிடிப்போம்,” என்று அவர் விளக்கினார்.