Home One Line P1 மறைமுகமாக அனுவார் மூசாவை பதவி விலகக் கோரிய சாஹிட்!

மறைமுகமாக அனுவார் மூசாவை பதவி விலகக் கோரிய சாஹிட்!

833
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விலக சவால் விடுத்துள்ளார்.

அவரை கட்சியை நாசமாக்குபவர் என்று முத்திரை குத்திய அவர், அம்னோவை முதுக்குப் பின்னால் இருந்து ‘குத்தினார்’ என்றும் சாஹிட் கூறினார்.

“குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக இருப்பவர்கள், ஆனால் இந்த மேடையில் இல்லை. அம்னோவை பின்னால் இருந்து குத்துகிறார். அவர் ஓர் ஆண் மகன் என்றால், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்,” என்று அவர் நேற்று அம்னோ பொதுக் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

சாஹிட் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசாவைக் குறித்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.

அண்மையக் காலமாக அனுவார் மூசா பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி அரசுக்கு ஆதரவாக பேசி வந்தது அம்னோ கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

சாஹிட் ஹமிடியின் இந்த கூற்று குறித்து பேசிய அனுவார், கட்சி தலைவராகவும், தலைமைத்துவத்தில் உள்ளதாலும், சாஹிட் இவ்வாறு பேசுவது சரியில்லை என்று குறிப்பிட்டார். இது மாதிரியான சவால் விடும் செயல்கள் அவருக்கு எதிராக மீண்டும் பாயும் என்றும் அவர் கூறினார்.