Home One Line P1 ‘அம்னோ வலுவானது என்றால் அதன் சின்னத்திலே போட்டியிடட்டும்!

‘அம்னோ வலுவானது என்றால் அதன் சின்னத்திலே போட்டியிடட்டும்!

581
0
SHARE
Ad
சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர்: சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ போட்டியிட மஇகா அனுமதிக்க வேண்டும் என்று  அம்னோ புத்ரி தலைவர் ஒருவர் பரிந்துரைத்ததை அடுத்து, அம்னோ மஇகாவிற்கு கொஞ்சமாவது மரியாதை செலுத்த வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் சிவராஜ் கோரியுள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களில் மஇகா தோல்வியடைந்த பின்னர் மஇகா அம்னோ வேட்பாளரை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் அம்னோ புத்ரி தலைவர் நோராசுரா அப்துல் கரீம் இன்று தெரிவித்தை அடுத்து சிவராஜ், அம்னோ தனது ‘ஆணவத்தைத் தணிக்காவிட்டால் தானாகவே போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்’ என்று கூறினார்.

பாரம்பரியமாக மஇகா கோட்டையான சுங்கை சிப்புட் தொகுதி முன்னாள் மஇகா தலைவர் சம்பந்தன் 1959 முதல் 1974 வரை போட்டியிட்ட நிலையில், துன் சாமிவேலு 1974 முதல் 2008 வரை போட்டியிட்டார்.

#TamilSchoolmychoice

“இது போன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த அம்னோவின் உயர் தலைமையை நினைவூட்ட விரும்புகிறேன். மஇகாவுடன் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், நீங்கள் எங்களுடன் வெளிப்படையாக பேசலாம், ” என்று சிவராஜ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவில் பேச வேண்டிய விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரதிநிதியை பயன்படுத்தி அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

“அம்னோ அனைத்து இடங்களிலும் போட்டியிட கேட்பதை நிறுத்துங்கள். அம்னோவின் உயர் தலைமை அதன் கூட்டணி கட்சிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகள் உங்களை மதிக்க விரும்பினால் முதலில் உங்கள் கூட்டணி கட்சிகளை மதிக்கவும்.

“அம்னோ மிகவும் வலிமையானது மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று அம்னோ உணர்ந்தால், அம்னோ பொதுத் தேர்தலை அம்னோ சின்னத்தில் போட்டியிடுவது நல்லது. தேசிய முன்னணியில் போட்டியிட தேவையில்லை,” என்று அவர் கூறினார்.