Home One Line P1 அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!

அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!

546
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இன்ஸ்டாகிராம் ஒரு பதிவில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரான கைரி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கட்சி தேர்தல் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

“15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (தேர்தல்களை) ஒத்திவைக்க வேண்டாம். இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும். அம்னோ ஒரு தெளிவான ஆணையைக் கொண்ட மக்களின் ஆதரவைப் பெறக்கூடிய ஒரு தலைமையுடன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். உச்சமன்றக் குழு சரியானதைச் செய்யுங்கள். நாம் இப்படியே தொடர முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அம்னோ பொதுப் பேரவையில் பெர்சாத்து உடனான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த, இரண்டு நாட்களுக்குப் பிறகு கைரி இந்த பதிவினை வெளியிட்டுள்ளார். மேலும், அனைத்து அம்னோ அமைச்சர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அண்மையில், சாஹிட் ஹமிடி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.