Home One Line P1 30 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவு இரத்து

30 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவு இரத்து

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் 30 விழுக்காடு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசாங்கம் இரத்து செய்வதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட் -19 பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த செயல்முறை முன்னர் வடிவமைக்கப்பட்டது.

மேலும், இன்னும் மாநிலங்களுக்கு இடையிலான பயணத் தடை நடைமுறையில் உள்ளது என்றும் இஸ்மாயில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, கிளந்தான், ஜோகூரில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 1- 14 வரை நீட்டிக்கப்பட்டதாகவும், சரவாக்க்கில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெர்லிஸ், புத்ராஜெயா, கெடா, பேராக், மலாக்கா , நெகிரி செம்பிலான், திரெங்கானு, சபா மற்றும் லாபுவானில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 1- 14 வரை நீட்டிக்கப்பட்டது என்று இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.