Home One Line P1 “அடுத்த தலைமுறைக் கட்சியாக மஇகா உருவெடுத்திருக்கிறது” – சரவணன் பெருமிதம்

“அடுத்த தலைமுறைக் கட்சியாக மஇகா உருவெடுத்திருக்கிறது” – சரவணன் பெருமிதம்

989
0
SHARE
Ad

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டை தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் தொடக்கி வைத்தார்.

“இன்றைக்கு இந்த இளைய சமுதாயத்தினரின் உற்சாகமான அரசியல் பங்கேற்பைப் பார்க்கின்றபோது, மஇகா அடுத்த தலைமுறையினருக்கான கட்சியாகவும் வளர்ச்சி பெற்று உருவெடுத்திருக்கிறது என்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்” என்றும் சரவணன் மாநாட்டுக்குப் பின்னர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேசிய மகளிர் தலைவி திருமதி உஷா நந்தினி, தேசிய இளைஞர் பகுதி தலைவர் தினாளன் இராஜகோபாலு, தேசிய புத்ரா தலைவர் பத்மராஜா, தேசிய புத்ரி தலைவி குமாரி ஹேமலதா அனைவரும் நம்பிக்கை மிகுந்த, எதிர்கால சிந்தனைக்கு வித்திடும் சிறந்த உரைகளை வழங்கினார்கள் என்றும் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இவர்களின் உழைப்பும், முன்முயற்சிகளும் கட்சியைப் மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றும் சரவணன் தெரிவித்தார்.

மஇகாவின் தேசியப் பொதுப் பேரவை நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 3) கிள்ளானில் பேராளர்களோடும், இயங்கலை வழியாகவும் நடத்தப்படுகிறது.