Home One Line P1 பெர்சாத்து-பாஸ் இடையில் தேர்தல் ஆலோசனைக் குழு

பெர்சாத்து-பாஸ் இடையில் தேர்தல் ஆலோசனைக் குழு

583
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்துவுடன் எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் இனி ஒத்துழைப்பு இல்லை என அம்னோ அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நாங்கள் தேசியக் கூட்டணியிலேயே நீடிப்போம் என அறிவித்திருக்கும் பாஸ், அதைத் தொடர்ந்து பெர்சாத்துவுடன் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் தொடக்கியுள்ளது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பொதுத்தேர்தலுக்கான ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் பெர்சாத்து கட்சி 12 பிரதிநிதிகளை தன் கட்சி சார்பாக நியமித்துள்ளது. இந்தத் தகவலை பெர்சாத்து தலைமைச் செயலாளரும் உள்துறை அமைச்சருமான ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளான பாஸ், ஸ்டார், எஸ்ஏபிபி, கெராக்கான் ஆகிய கட்சிகளுடனான உறவை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.