Home One Line P2 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: முக்கிய நடிகர்கள் வாக்களித்தனர்

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: முக்கிய நடிகர்கள் வாக்களித்தனர்

448
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தொடங்கியது.

காலை 7 மணி (இந்திய நேரப்படி) முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 88,900 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நடிகர் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோர் தி.நகர் வாக்குசாவடியில் வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனுடன் வாக்களித்தார்.

தேர்தல் முடிவுகள் வருகிற மே 2 -ஆம் தேதி வெளிவரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.