Home One Line P1 பெர்சாத்துவுடனான உறவு, அம்னோவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கு சமமானது!

பெர்சாத்துவுடனான உறவு, அம்னோவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கு சமமானது!

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான கட்டமைக்கப்பட்ட உறவு, முவாபாக்காட் நேஷனல் மூலம் அம்னோவுடனான அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்ததாக இருக்கிறது என்று பாஸ் தெரிவித்துள்ளது.

தேசிய கூட்டணியில் அவர்களின் ஒத்துழைப்பு உம்மாவை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அம்னோவிடம் இருந்து அழைப்பு வந்த போதிலும், உம்மாவின் ஒற்றுமையை கட்டியெழுப்ப விரும்புவதன் அடிப்படையில் பெர்சாத்துவுடன் இருப்பதாக பாஸ் வலியுறுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

அனைத்து கட்சிகளுடனும் ஒத்துழைப்பை ஏற்படுத்த கட்சி விரும்புவதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.