Home One Line P1 அடுத்த தேர்தலில் ஜசெக வெற்றி தீர்மானிக்கும் கட்சியாக உருப்பெறும்

அடுத்த தேர்தலில் ஜசெக வெற்றி தீர்மானிக்கும் கட்சியாக உருப்பெறும்

743
0
SHARE
Ad

கோத்தா பாரு: 15- வது பொதுத் தேர்தலில் ஜசெக கட்சி வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக அமையும் என்று அதன் தலைவர்கள் நம்புகின்றனர்.

ஜசெக பொருளாளர் போங் குய் லுன் கூறுகையில், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 22 மாதங்கள் மட்டுமே நீடித்திருந்தாலும், மக்கள் ஆணையை மீட்டெடுப்பதை அவர்கள் கைவிடவில்லை என்று கூறினார்.

“கடந்த ஆண்டு தொடக்கத்தில் ‘செரட்டன் மூவ்’ மூலம் ஆட்சி கவிழ்ந்தாலும், நாங்கள் முயற்சியை  கைவிடவில்லை. நம்பிக்கை கூட்டணி குறிக்கோள் தொடரும். ஜசெக கட்சி வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கிளந்தான் கோத்தா பாருவில் இன்று முதல் முறையாக நடைபெற்ற ஜசெக மாநாட்டின் தொடக்க உரையின் போது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஜசெக கிளந்தானில் முதல் கட்சித் தேர்தலை நடத்தி வரலாற்றைப் படைத்தது.