Home நாடு நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி!

நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி!

547
0
SHARE
Ad

சிரம்பான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தேர்தலில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (படம்) 501 வாக்குகள் பெற்று முதல் நிலையில் தேர்வு பெற்றார்.

அவரைத் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார் 465 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அருள்குமார்

ஜசெகவின் சட்டவிதிகளின்படி மாநிலத் தேர்தலில் மிக அதிக வாக்குகளுடன் முதல் 15 இடங்களைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். அதற்குப் பின்னர் அந்த 15 வெற்றியாளர்களும் தங்களுக்குள் மாநிலத்துக்கானப் பொறுப்பாளர்களை நியமித்துக் கொள்வர்.

#TamilSchoolmychoice

நேற்றைய ஜசெக மாநாட்டில் நெகிரி செம்பிலான மந்திரி பெசார் அமினுடின் ஹாருணும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர், ஜசெக இரண்டும் தங்களுக்கிடையிலான தொகுதிப் பங்கீடுகளை சுமுகமாக முடித்துக் கொண்டுள்ளன என்றும் அமினுடின் ஹாருண் தெரிவித்தார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றங்கள், 11 சட்டமன்றங்களில் போட்டியிட்ட ஜசெக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் நம்பிக்கைக் கூட்டணி 2018-இல் வெற்றி பெற்ற 20 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றியடைய முடியும் என்றும் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.