Home நாடு வெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து

வெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து

985
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 10) நாடு முழுமையிலும் உள்ள எல்லா மஇகா கிளைகளுக்கும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. பெரும்பாலான கிளைகளில் போட்டிகள் இல்லை என்பதால் பல மஇகா கிளைத் தலைவர்கள் ஏகமனதாகக் கிளைத் தலைவர்களாகத் தேர்வு பெற்றனர்.

அந்த கிளைத் தலைவர்கள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

“நாடு முழுவதும் வேட்புமனுத் தாக்கல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியிலும், தோல்வியிலும், இன்பத்திலும், இடர்களிலும், நமது கட்சி நலன்களுக்காகவும் இந்திய சமுதாயத்திற்கும் உழைத்துக் கொண்டிருக்கும் நமது கிளைத் தலைவர்களின் சேவைகளால்தான் நமது கட்சி இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது. வாழ்த்துகள்” என விக்னேஸ்வரன் கிளைத் தலைவர்களுக்கான தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த 2021-ஆம் ஆண்டு மஇகாவுக்கு தேர்தல் ஆண்டாகும். அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக மஇகா கிளைகளுக்கான தேர்தல்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி நாடு முழுமையிலும் உள்ள மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெற்றன. போட்டியிருப்பின் இனி அதற்கான தேர்தல்கள் நடைபெறும்.

மஇகா கிளைகளுக்கான தேர்தல்கள் முடிந்ததும் அடுத்த கட்டமாக மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.