Home One Line P1 அன்வார்- சாஹிட் பேசியது உண்மை என்கிறார் அஸ்மின்!

அன்வார்- சாஹிட் பேசியது உண்மை என்கிறார் அஸ்மின்!

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடல் உண்மையானது என்று முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை கொண்டுள்ளார்.

அன்வார் பிகேஆரில் இருந்தபோது தாம் அவருடன் பணியாற்றிய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

அன்வார் பிகேஆருக்கு கடுமையான துரோகம் இழைத்தது மட்டுமல்லாமல், நம்பிக்கை கூட்டணி கட்சிகளையும் ஏமாற்றியதாக அஸ்மின் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த இரண்டு நபர்களும் குறைந்தபட்சம் அந்தந்த கட்சி உறுப்பினர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அன்வார் இப்ராகிம் தனது சொந்தக் கட்சிக்கு மட்டுமல்ல, நம்பிக்கை கூட்டணி கட்சிகளுக்கும் தெரியாமல் இரகசியமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தெரிகிறது. இது மிகப்பெரிய துரோகம் என்று நான் நினைக்கிறேன்.

“நான் அவருடன் நீண்ட காலமாக பணியாற்றி உள்ளேன். அவரது (முன்னாள்) அந்தரங்க செயலாளராகவும் இருந்துள்ளேன். இது ஓர் உண்மையான பதிவு என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தக் குரல் பதிவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.