Home One Line P1 குரல், காணொலி பதிவுகள் விஷயத்தில் அஸ்மின் நிபுணர்!- அன்வார்

குரல், காணொலி பதிவுகள் விஷயத்தில் அஸ்மின் நிபுணர்!- அன்வார்

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிக்கும் இடையிலான உரையாடல் குரல் பதிவு குறித்த அஸ்மின் அலியின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட பார்வை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

எவ்வாறாயினும், அன்வார் இது குறித்து விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.

“அது அவருடைய (அஸ்மினின்) பார்வை. குரல் மற்றும் காணொலி பதிவுகள் விஷயத்தில் அவர் நிபுணர், ” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நேற்று, அன்வார்- சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட குரல் பதிவு உண்மையாக இருக்க அதிகமான சாத்தியம் இருப்பதாகவும், அன்வார் தனது கட்சிக்கும், நம்பிக்கை கூட்டணிக்கு துரோகம் இழைத்ததாகவும் கூறியிருந்தார்.