Home One Line P1 பெஜுவாங் யார் பக்கமும் இல்லை!

பெஜுவாங் யார் பக்கமும் இல்லை!

661
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி 15- வது பொதுத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுமா அல்லது எந்த கூட்டணியில் இணையலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

நேரம் வரும்போது ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

“தற்போது, தனியாக இருப்போமா அல்லது கூட்டணியில் இருப்போமா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. எனவே நாங்கள் இன்னும் இது தொடர்பாக பேசுவோம். நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நேரம் நெருங்கும்போது, ​​நாங்கள் ஓர் அறிவிப்பை வெளியிடுவோம், ” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அன்வார், சாஹிட் ஹமிடி குரல் பதிவு தொடர்பாக கருத்துரைத்த முக்ரிஸ், இது தங்களால் உண்மை ஊகிக்கப்படுவதாகக் கூறினார். பிகேஆர், அம்னோ இடையிலான பேச்சுவார்த்தை குறித்து தனது தந்தை துன் மகாதீர் குறி வந்தது இப்போது உண்மையாகி இருப்பத அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, பெஜுவாங் சார்பாக ஆரம்ப கட்டங்களில் துன் அவர்கள் எடுத்த முடிவு சரியானதுதான். பெஜுவாங் மூன்றாவது கூட்டணியாக இருக்கும். நாங்கள் யார் பக்கமும் இல்லை. எங்களுக்கு சொந்த நிலைப்பாடு உள்ளது. மேலும் அந்த நிலைப்பாடு சரியானது என்று தெரிகிறது,” என்று அவர் கூறினார்.