கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் கூட்டணியின் முடிவைத் தொடர்ந்து, ஜோகூர் தேசிய முன்னணி தொகுதி பேச்சுவார்த்தைகளை பாஸ், பெர்சாத்து இல்லாமல் தொடங்கியுள்ளது.
மத்தியத்தில் பெர்சாத்துவுடன் பாஸ் கட்சி தொகுதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதால் இது ஏற்பட்டுள்ளது.
ஜோகூர் அம்னோ தலைவர் ஹஸ்னி முகமட், தேசிய முன்னணி கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளன என்று சினார் ஹரியானிடம் கூறியுள்ளார்.
இருப்பினும், கூட்டணி இறுதி இட ஒதுக்கீட்டை இன்னும் தீர்மானிக்கவில்லை.
“நான் மசீச மற்றும் மஇகா உடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினேன். இந்த பொதுத் தேர்தலில் மசீச. மஇகா போட்டியிட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்த முறை பேச்சு வார்த்தைகளில் முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய கூட்டணி சம்பந்தப்படவில்லை. முவாபாக்காட்டில் பல நிச்சயமற்ற நிலைகள் இருப்பதால் தான் இது எற்பட்டுள்ளது,” என்று நேற்று ஹஸ்னி கூறினார்.
அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து உடனான உறவை நிறுத்திக் கொள்வதாக அண்மையில் முடிவு செய்யப்பட்டிருந்தது.