கோலாலம்பூர்: அம்னோ உயர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த கைரி ஜமாலுடினுக்கு கட்சியிலிருந்து யாரையும் பதவி விலகக் கோர உரிமை இல்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சாஹிட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இடையே தொலைபேசி அழைப்பு உரையாடல் இருந்ததாக வெளியான குரல் பதிவைத் தொடர்ந்து கட்சித் தலைவரின் நிலைப்பாடு “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கைரி கூறியதை அடுத்து சாஹிட் இவ்வாறு கூறினார்.
குரல் பதிவு கட்சியில் பலருக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கைரி கூறினார். ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
“கட்சியிலிருந்து என்னை அல்லது வேறு யாரையும் பதவி விலகக் கேட்க எந்த உரிமையும் இல்லை,” என்று எம்எம்டியிடம் கூறினார்.
“அவர் அம்னோ தலைவர் பதவிக்கு முன்னர் போட்டியிட்டார், ஆனால், வெற்றி பெறவில்லை. இருப்பினும், கட்சியை வலுப்படுத்த உதவ முடியும் என்று அவர் நினைத்தால், அவர் மீண்டும் முயற்சிக்க வேண்டும், ” என்று சாஹிட் கூறினார்.