Home One Line P1 தென்னாப்பிரிக்காவின் பி.1.351 பிறழ்வு 17 சம்பவங்களில் கண்டறியப்பட்டுள்ளது

தென்னாப்பிரிக்காவின் பி.1.351 பிறழ்வு 17 சம்பவங்களில் கண்டறியப்பட்டுள்ளது

399
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி மொத்தம் 17 கொவிட்-19 சம்பவங்கள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறழ்வான  பி.1.351 உடன் சம்பந்தப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க பிறழ்வு பி .1.351 ஹுலு லங்காட் மற்றும் செபாங் சிலாங்கூர் மாவட்டங்களில் உள்ள ஜாலான் லிமா தொற்று குழுவில் (மூன்று சம்பவங்கள்) காணப்பட்டது. கெபுன் பாரு தொற்று குழு , கோலா லங்காட், சிலாங்கூர் (ஒன்பது சம்பவங்கள்); டெக்னோலொஜி எமாஸ் தொற்று குழு, கோலா லங்காட், சிலாங்கூர் (ஒரு சம்பவம்).

தென்னாப்பிரிக்க பிறழ்வு  பி.1.351 இன் கண்டுபிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் பிர்ட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் உலகளவில் தெரிவிக்கப்பட்டது.