Home நாடு ஷாஹிடான் காசிம் அம்னோ பெர்லிஸ் தலைவராக நீக்கம் – சாஹிட் அதிரடி

ஷாஹிடான் காசிம் அம்னோ பெர்லிஸ் தலைவராக நீக்கம் – சாஹிட் அதிரடி

652
0
SHARE
Ad
Shahidan Kassim
டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம்

கங்கார் : பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஆராவ் நாடாளுமன்றத் தொகுதிக்கான அம்னோ உறுப்பினர் ஷாஹிடான் காசிம், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஹாமிடியின் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து அடிக்கடி கடுமையாகத் தாக்கி விமர்சித்து வந்தவர் ஷாஹிடான் காசிம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஷாஹிடான் காசிம் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது, நாளைய கூட்டம் பரபரப்பான சூழலில் நடைபெறவிருப்பதைக் காட்டுகிறது.

#TamilSchoolmychoice

நாளைய அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் சாஹிட்டை பதவி விலகச் சொல்லும் அறைகூவல்கள் எழக்கூடும். அல்லது திட்டமிட்டபடி கட்சித் தேர்தல்களை நடத்த வற்புறுத்தும் நெருக்கடிகள் சாஹிட்டுக்குத் தரப்படலாம்.