Home இந்தியா இந்தியா : 3-வது நாளாக உலகிலேயே அதிக கொவிட்-19 தொற்றுகள்

இந்தியா : 3-வது நாளாக உலகிலேயே அதிக கொவிட்-19 தொற்றுகள்

470
0
SHARE
Ad

புதுடில்லி : தொடர்ந்து 3-வது நாளாக உலகிலேயே அதிக கொவிட்-19 தொற்றுகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இன்று சனிக்கிழமை 346,786 தொற்றுகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 2,624 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தன. இதுவரையில் கொவிட்-19 மரண எண்ணிக்கை இந்தியாவில் 189,544 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாடு முழுக்க மருத்துவமனை தொடர்பான பல அத்தியாவசிய உபகரணப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், மருந்துகள், பிராணவாயு (ஆக்சிஜன்) கொள்கலன்கள், சுவாசக் கருவிகள் ஆகியவையின் பற்றாக்குறைகள் காரணமாக பல மரணங்கள் நிகழ்வதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சவக் கிடங்குகளில் இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன என்ற சோகச் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.