இதில் 2,691 பேர் உள்நாட்டினர். 26 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 390,252 ஆக அதிகரித்துள்ளன.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,926 ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில் 272 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 124 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்று 11 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,426 ஆக உயர்ந்துள்ளது.
அதற்கடுத்த நிலையில் கோலாலம்பூரில் 240 தொற்றுகளும், ஜோகூரில் 126 தொற்றுகளும் பதிவாகியிருக்கின்றன.