Home உலகம் இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பல் : 53 பேரும் மரணம்!

இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பல் : 53 பேரும் மரணம்!

722
0
SHARE
Ad

ஜகார்த்தா: (கூடுதல் தகவல்களுடன்) இதுவரையில் “காணாமல் போனதாக” அறிவிக்கப்பட்டிருந்த கே.ஆர்.ஐ.நங்கலா – 402 என்ற பெயர் கொண்ட இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின்  சிதைந்த பாகங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 24) அந்தக் கப்பல் “மூழ்கி விட்டது” என அந்தக் கப்பலை வகைப்படுத்தி இந்தோனிசிய கடற்படை அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்திலிருந்து 850 மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் மேல்பகுதியில் மூன்று இடங்களில் உடைப்புகள் மூலம் பிளவுகள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்தோனிசிய கடற்படை அறிவித்திருக்கிறது.

அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேர்களும் மரணமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பாலித் தீவுக்கருகில் எந்தப் பகுதியில் அது மூழ்கியது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கப்பலையும் அதில் சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கப்பலில் 53 பணியாளர்கள் இருந்தனர். அனைவரும் மரணமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த துர் சம்பவத்திற்காக மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமட் ஷா இந்தோனிசிய அதிபருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

காணாமல் போன இந்தோனிசிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 24)  கண்டுபிடிக்கப்பட்டன.

சனிக்கிழமை (ஏப்ரல் 24) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தோனிசிய கடற்படையின் தலைவர் யுதோ மார்கோனோ அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் என நம்பப்படும் 6 சிதிலங்களும் பத்திரிகையாளர் முன்னிலையில் வைக்கப்பட்டன. இந்தப் பொருட்கள் 850 மீட்டர் (930 கஜம்) ஆழம் கொண்ட கடல் பகுதியில் மிதந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டன.

கே.ஆர்.ஐ.நங்கலா – 402 என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல் புதன்கிழமை (ஏப்ரல் 21) அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (100 கி.மீ) தொலைவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

ஆறு போர்க்கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 400 பேர் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா மீட்புக்கான கப்பல்களை அனுப்பி தேடலில் உதவின.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் தேவையான  உதவிகளை இந்தோனிசியாவுக்கு வழங்கியுள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் தகவல் அளிக்கத் தவறியது, தொடர்பு இழந்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

ஆழமான நீரில் மூழ்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன கப்பல் இந்தோனிசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது 1970- களின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்டது.

காணாமல் போன அந்தக் கப்பலில் 53 பணியாளர்கள் இருந்தனர். நேற்று சனிக்கிழமையுடன் அவர்களுக்குத் தேவையான பிராண வாயு கையிருப்பு தீர்ந்திருக்கும் என நம்பப்படுகிறது.