Home கலை உலகம் ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பார்வையாளர்கள் இன்றி தொடங்கியது

ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பார்வையாளர்கள் இன்றி தொடங்கியது

738
0
SHARE
Ad

ஹாலிவுட்: ஆஸ்கார் விருது விழா ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குத் (அமெரிக்க நேரப்படி) தொடங்கியது.

​​2021 ஆஸ்கார் விருது விழா, ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. எல்லா இனத்தினரும் முக்கிய விருதுகள் பெற இம்முறை பரிந்துரைக்கப்பட்டது இதில் குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு நடிகர்கள் சிறந்த நடிகர் பிரிவில் (ஸ்டீவன் யூன் மற்றும் ரிஸ் அகமட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநராக (சோலி ஜாவோ மற்றும் எமரால்டு பென்னல்) இரண்டு பெண்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள், இருப்பினும் சிவப்பு கம்பள நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதி உள்ளது. கூடல் இடைவெளி கட்டுப்பாடுகள் காரணமாக, சிவப்பு கம்பள நிகழ்ச்சி குறைவான நிருபர்களுடன் அகாடமி எற்பாடு செய்துள்ளது.