Home நாடு 50,000 ரிங்கிட் அபராதம் எனது அதிகாரத்திற்கு உட்பட்டு இல்லை!

50,000 ரிங்கிட் அபராதம் எனது அதிகாரத்திற்கு உட்பட்டு இல்லை!

890
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிளந்தானில் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 50,000 ரிங்கிட் அபராதம் தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு இல்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்கினார்.

அப்படியிருந்தும், அது நடக்கக்கூடாது என்று அவர் தனிப்பட்ட முறையில் கூறினார்.

“50,000 ரிங்கிட் அபராதம் பற்றி, நாட்டில் சலசலப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுக்குத் தெரியும், இந்த தண்டனை சுகாதார அமைச்சின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. முன்னதாக, ஊடகங்களின் மூலம் நானே பார்த்தேன், சட்ட அமைச்சர் (தக்கியுடின் ஹாசன்) 50,000 ரிங்கிட் அபராதம் அதிகமாக இருப்பதாக விளக்கினார்.

#TamilSchoolmychoice

“குற்றங்கள் மற்றும் விதிக்கப்பட வேண்டிய சம்மன்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் காரணங்கள் ஏற்கனவே விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னர் அறிவிக்கப்பட்ட அவசர கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் 50,000 ரிங்கிட் நிறுவனம் தொடர்பானது.

“இருப்பினும், இது எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல, ஆனால் அபராத குறைப்பு முறையீடு சுகாதார அமைச்சின் கீழ் உள்ளது, ” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா, வணிகருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்து அல்லது விலக்கு அளித்து மறு மதிப்பீடு செய்வார் என்று தெரிவித்தார்.