Home நாடு கால், தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் கணபதி மரணம்!- வழக்கறிஞர்

கால், தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் கணபதி மரணம்!- வழக்கறிஞர்

753
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படும் ஏ.கணபதியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளிவந்துள்ளன.

அவரது கால்கள் மற்றும் தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால்தான் அவர் இறந்தார் என்று அவரது குடும்ப வழக்கறிஞர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

“இன்று (நேற்று) கோலாலம்பூர் மருத்துவமனையின் நோயியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். கணபதி கால்கள் மற்றும் தோள்களில் பலத்த காயங்களால் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரேத பரிசோதனை முடிவுகளை மருத்துவமனை குடும்பத்திற்கு விளக்கமளித்தபோது, ​​மரணத்தை விசாரிக்கும் அதிகாரியும் இருந்தார் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், குடும்பத்திற்கு இன்னும் முழு பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்று கணேஷ் கூறினார்.

“இறந்த நாளில் எட்டு மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அறிக்கையின் முடிவுகள் குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை.

“இப்போது, ​​இந்த வழக்கை முழுமையாக விசாரிப்போம் என்ற உறுதிமொழியை காவல் துறையினர் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல் துறை காத்திருப்பதாக கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறியதை அவர் குறிப்பிட்டார்.