Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

தமிழ்நாடு தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

462
0
SHARE
Ad

சென்னை : உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி  இந்தியா முழுமையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) வெளியாகின்றன.

இன்று காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை 10.30) வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

அனைத்துக் கருத்துக் கணிப்புகளும், வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளும் திமுக கூட்டணியே பெரும்பான்மை இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அதிமுக மோசமாகத் தோல்வியடையுமா? அல்லது மிகக் குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில் தோல்வியடையுமா? மொத்தம் எத்தனை தொகுதிகளைப் பெறும்? கமல்ஹாசன், சீமான் போன்ற மற்ற கட்சிகள், கூட்டணிகள் எந்த அளவுக்கு வாக்குகளைப் பெறப் போகின்றன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்று விடை தெரியும்.

கொவிட்-19 கட்டுப்பாட்டு நிபந்தனைகளால் வாக்கு எண்ணிக்கை மெதுவாகவே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் முகவர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே அவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாம்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்றிரவுக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிவந்து விடும் – தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதும் தெரிந்து விடும்.

இன்று காலை முதல் செல்லியல் தளத்தில் தமிழ் நாடு உள்ளிட்ட 5 இந்திய மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். செல்லியல் குறுஞ்செயலியின் மூலம் தேர்தல் முடிவுகள் குறுஞ்செய்திகளாக உடனுக்குடன் உங்களை வந்தடையும்.

தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள செல்லியலுடன் இணைந்திருங்கள்!