Home இந்தியா புதுச்சேரி: பாஜக முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது

புதுச்சேரி: பாஜக முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது

706
0
SHARE
Ad

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதிகளில் 16 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பாஜக கூட்டணி அந்த மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது.

தமிழ் மக்களைக் கொண்ட மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான அரசியலில் இது ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை திமுக கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அதே சமயம் அண்டை மாநிலமான புதுச் சேரியில் திமுகவின் நேர் எதிரியான பாஜக ஆட்சி அமைக்கிறது. நீண்ட காலமாக இந்த இரு மாநிலங்களுக்கும் இடையில் இருந்துவரும் நெருக்கமான உறவுகள் இனி எப்படி இருக்கும் என்பது குறித்த ஆரூடங்களும் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

30 தொகுதிகளில் இரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 6 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

திமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் வேளையில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சையாக 6 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பாஜவை ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக உருமாற்றுவோம் என பாஜக பிரச்சாரத்தின் போது அறிவித்தது. அங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரியை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவோம் என சூளுரைத்தார்.

ஏற்கனவே, கர்நாடகத்தைக் கைப்பற்றியிருக்கும் பாஜக, தென் இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது.

புதுச்சேரியை முன் மாதிரி மாநிலமாக உருமாற்றுவதன் மூலம் தென்னிந்தியாவில் மேலும் வலுவான ஆதரவைப் பெற்று பாஜக காலூன்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.