Home நாடு ஜசெக ஜோகூர் தேர்தலில் லியூ சின் தோங் அணியினர் மாபெரும் வெற்றி

ஜசெக ஜோகூர் தேர்தலில் லியூ சின் தோங் அணியினர் மாபெரும் வெற்றி

602
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஜசெக கட்சித் தேர்தல்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 மே 2021) நடைபெற்ற ஜோகூர் மாநில ஜசெக தேர்தல் முடிவுகள் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டன.

காரணம் நடப்பு ஜோகூர் ஜசெக தலைவர் லியூ சின் தோங் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்ததுதான்! லிம் கிட் சியாங்கின் தீவிர ஆதரவாளரான லியூ சின் தோங் அண்மையில் எழுதிய நூல் ஒன்றும் பரவலாக சர்ச்சையாக்கப்பட்டது.

2018 முதலான துன் மகாதீர் ஆட்சிக் காலத்தில்  நடைபெற்ற இதுவரை வெளிவராத சில இரகசியத் தகவல்களை அந்த நூலில் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார் லியூ சின் தோங்.

#TamilSchoolmychoice

20 மாநில ஜசெக செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 15 இடங்களை சின் தோங் ஆதரவாளர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.

சின் தோங் மீண்டும் ஜோகூர் மாநிலத் தலைவராக நான்காவது தவணைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். போட்டியிட்டவர்களில் மிக அதிகமான வாக்குகளோடு (561 வாக்குகள்) சின் தோங் முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் ஜோகூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.இராமகிருஷ்ணனும் ஒருவராவார். ஜோகூர் மாநில உதவித் தலைவராக இராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.