Home இந்தியா தமிழ்நாடு: பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை- அண்ணாமலைக்கு பின்னடைவு

தமிழ்நாடு: பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை- அண்ணாமலைக்கு பின்னடைவு

558
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம், தாராபுரத்தில் எல்.முருகன், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். ஆயினும், அரவக்குறிச்சி தொகுதியில் கே.அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.